கோத்தா கினபாலு – டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகியுள்ளதைத் தொடர்ந்து, முன்னாள் வெளியுறவு அமைச்சரும் சபா அம்னோவின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான அனிபா அமான் அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அனிபா அமான் முன்னாள் சபா முதலமைச்சர் மூசா அமானின் சகோதரருமாவார். கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் அனிபா அமான் இருந்து வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக அனிபா அமான் அம்னோவில் இணைந்து பணியாற்றி வந்தார்.
நாளை நடைபெறவிருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனிபா அமான் அம்னோவிலிருந்து தனது விலகல் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
14-வது பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டியில் 156 வாக்குகள் வித்தியாசத்தில் அனிபா தனது கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.