Home நாடு தேமு, நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்காக குரல் எழுப்பவில்லை!- உதயகுமார்

தேமு, நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்காக குரல் எழுப்பவில்லை!- உதயகுமார்

851
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய்மேல்

கோலாலம்பூர்: இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தேர்தல் ஆணையம் ஏழு நாடாளுமன்ற இடங்களை ஏற்படுத்த வேண்டும் என ஹிண்ட்ராப் 2.0 அமைப்பு வலியுறுத்தி உள்ளது. அதாவது, பாடாங் செராய், பத்து காவான், ஈப்போ பாராட், கோத்தா ராஜா, போர்ட் டிக்சன், தெப்ராவ் மற்றும் கேமரன் மலை தொகுதிகளில் கூடுதல் பிரதிநிதியை ஏற்படுத்த வேண்டும் என அதன் தலைவர் பி. உதயகுமார் கேட்டுக் கொண்டார்.

சீனர் மற்றும் மலாய்க்காரர் அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார மேம்பாடு திட்டங்கள் இந்நாட்டில் வாழும் ஏழை இந்தியர்களுக்காக குரல் கொடுப்பது அரிது என அவர் குறிப்பிட்டுள்ளார்.   

கடந்த 62 ஆண்டுகளில், தேசிய முன்னணியாக இருக்கட்டும், நம்பிக்கைக் கூட்டணியாக இருக்கட்டும், இவர்கள் இந்தியர்களுக்காக குரல் கொடுக்கவே இல்லைஎன்று உதயகுமார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடந்த கூட்டம் ஒன்றில் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்திய சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருந்தாலும், அவர்களும் இந்தியர்களுக்காக பேச முற்படுவதில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.