Home நாடு “நான் அன்வாரை அச்சுறுத்தவில்லை, புத்தகத்தின் உரிமையை ஏற்றுக்கொள்ள கூறினேன்!”- யஹாயா இஸ்மாயில்

“நான் அன்வாரை அச்சுறுத்தவில்லை, புத்தகத்தின் உரிமையை ஏற்றுக்கொள்ள கூறினேன்!”- யஹாயா இஸ்மாயில்

672
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ‘அன்வார் ஏன் பிரதமராக இருக்க முடியாது’ என்ற புத்தகத்தை எழுதிய யஹாயா இஸ்மாயில், தாம் அவரை மிரட்டி பெரிய தொகையைப் பெற முயற்சித்ததாகக் கூறுவதை மறுத்துள்ளார்.

அப்புத்தகத்தின் பதிப்புரிமையை அன்வாருக்கு விற்க முன்வந்ததாக யஹாயா இஸ்மாயில் கூறினார்.

நான் அவரை மிரட்டி 400,000 ரிங்கிட் பறிக்க முயன்றதாகக் கூறப்படுவது உண்மையில்லை. அப்புத்தகம் விற்கப்பட வேண்டிய பதிப்புரிமை மதிப்பை அடிப்படையாகக் கொண்டே அந்த விலை நிர்ணயிக்கப்பட்டது” என்று இஸ்மாயில் கூறினார்.

#TamilSchoolmychoice

அவருக்கு ஆர்வம் இல்லையென்றால், அதை வாங்க வேண்டாம்என்று அவர் இன்று வியாழக்கிழமை தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

நேற்று புதன்கிழமை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி, இஸ்மாயில் எழுதிய கையெழுத்துப் பிரதியை வெளிப்படுத்தினார். மேலும், அவரை எழுதத் தூண்டியுள்ளனர் என்றும், இஸ்மாயில் அன்வாரை அச்சுறுத்துவதாகவும் கூறியிருந்தார்.

இது குறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கையை எடுக்க காவல் துறையிடம் ஒப்படைப்பதாக அன்வார் கூறியிருந்தார்.