Home நாடு அமைச்சர் பொன். வேதமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் பொன். வேதமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

1123
0
SHARE
Ad
சுகாதார அமைச்சருடன் வேதமூர்த்தி

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி இன்று வியாழக்கிழமை காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக கிளந்தானில் உள்ள பூர்வக்குடி கிராமத்தில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கு அவர் அங்கு சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பிய அமைச்சருக்கு காய்ச்சலுடன், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த வாரத்திற்கான அனைத்து நிகழ்ச்சிகளையும் இரத்து செய்யக்கூடும்என்று அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரம் எப்எம்டியிடம் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நோய்க்கான காரணத்தை கண்டறிய மருத்துவமனை தற்போது அமைச்சருக்கு சோதனைகளை நடத்தி வருவதாகவும், குவா முசாங்கில் உள்ள பூர்வக்குடி கிராமமான கம்போங் கோலா கோ நீரினால் இது ஏற்பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று அவ்வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் குறைந்தது நான்கு நாட்கள் அக்கிராமத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.