Home நாட்டுவலம் நாட்டுவலம் : ஒரு வரிச் செய்திகள்

நாட்டுவலம் : ஒரு வரிச் செய்திகள்

521
0
SHARE
Ad
நாடாளுமன்றத்தில் மகாதீர் (படம் : நன்றி – மலேசிய நாடாளுமன்றம் அகப்பக்கம்)

நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி இன்று புதன்கிழமை காலை வரையிலான நாட்டின் முக்கிய செய்திகளின் தொகுப்பை ஒரு வரிச் செய்திகளாக வழங்குகிறோம்.

  • மலேசியர்களுக்கான வாக்களிக்கும் வயதை 21-இல் இருந்து 18-ஆக குறைக்கும் அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
  • தமது முந்தைய நிருவாகத்தின் போது ஜிஎஸ்டி வருவாய் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக திங்கட்கிழமை தேசிய பொது கணக்காய்வாளர் குழு (பிஏசி) தாக்கல் செய்த அறிக்கை தம்மை ஆதரிக்கும் வகையில் இருந்தது மன நிறைவை அளிப்பதாக நஜிப் தெரிவித்தார்.
  • கணிதம், அறிவியல் பாடங்களை ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முழுமையாக ஆராய்ந்து வருகிறது என துன் மகாதீர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • அமைச்சர் பொன்.வேதமூர்த்தி புதிய கட்சியான மலேசிய முன்னேற்றக் கட்சியை (எம்ஏபி) நிறுவியது மஇகாவிற்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் மாறாக நம்பிக்கைக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேதான் போட்டிகளை உருவாக்கும் என்றும் மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
  • ஹசிக் அப்துல்லா வெளியிட்ட ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பில் மேலும் மூவரை ஜோகூர் பாரு வட்டாரத்தில் காவல் துறை கைது செய்துள்ளது.