Home நாடு அஸ்மின் அலி காணொளி விவகாரத்தில் அன்வாரின் அந்தரங்க செயலாளர் கைது!

அஸ்மின் அலி காணொளி விவகாரத்தில் அன்வாரின் அந்தரங்க செயலாளர் கைது!

763
0
SHARE
Ad

ஈப்போ: பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலிக்கு தொடர்பான ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரத்தில் விசாரணைக்கு உதவும் பட்சத்தில் பேராக் மாநில பிகேஆர் கட்சி தலைவர் பார்ஹாஷ் வாபா சால்வடார் ரிசால் முபாராக்கை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமின் அந்தரங்கச் செயலாளராக இருக்கும் பார்ஹாஷ், மேலும் இரண்டு சந்தேக நபர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) ஜோகூர் பாசிர் கூடாங்கில் கைது செய்யப்பட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்ததாக டி ஸ்டார் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பான சான்றுகள் அஸ்மினுக்கு எதிராக இருந்ததால், அவரை பதவியிலிருந்து விலகுமாறு பார்ஹாஷ் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக பிகேஆர் கட்சியின் சாந்துப்போங் தொகுதி இளைஞர் பகுதி தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸ் மற்றும் ஐந்து பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.