Home நாடு “அஸ்மின் காணொளி விவகாரம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பீதி கிளம்பி விட்டது!”- சுரைடா

“அஸ்மின் காணொளி விவகாரம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பீதி கிளம்பி விட்டது!”- சுரைடா

708
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியுடன் இணைக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளிகள் வெளியிடப்பட்டதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி குறித்து காவல் துறையினர் வெளிப்படுத்தவிருந்த போது சில தரப்பினர் பீதியடைந்துள்ளதாக பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா காமாருடின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட காணொளியில் உள்ள அரசியல்வாதியை விடுமுறையில்செல்ல வலியுறுத்திய பிகேஆர் கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் ஷாம்சுல் இஸ்காண்டார் முகமட் அகினின் அறிக்கையை குறிப்பிட்டு அவர் பேசினார்.

#TamilSchoolmychoice

மேலும், அவரது செய்தியறிக்கையில் காவல் துறையினரின் விசாரணை அக்காணொளியின் நம்பகத்தன்மையைக் கடந்து ஆபாச காணொளி பரவலுக்கு திசை திரும்பி உள்ளதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக அக்காணொளிகளில் இருந்தது தாம்தான் என ஹசிக் அப்துல்லா ஒப்புக் கொண்டுள்ள வேளையில், பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி மறுத்து காவல் துறையினரின் விசாரணையைக் கோரியுள்ளார்.