புதுடில்லி – பிப்ரவரி 24, 25-ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது மனைவிமெலானியா டிரம்பும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அவர்களுடன் டிரம்பின் மகள் ஐவாங்கா டிரம்பும் தனது கணவருடன் கலந்து கொண்டார்.
நேரடியாக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகர் வந்திறங்கிய டிரம்ப் அங்கு மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தார். அதன்பின்னர் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கைத் திறந்து வைத்ததோடு, அங்கு நூறாயிரம் பேர்களுக்கும் மேல் கூடியிருந்த பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதன் பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, புதுடில்லி வந்தடைந்த அவர்கள் உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மகாலையும் பிரமிப்புடன் சுற்றிப் பார்த்தனர்.
மறுநாள் புதுடில்லியில் மோடியும் டிரம்பும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இரு தரப்புகளுக்கும் இடையில் பல்வேறு ஒத்துழைப்பு உடன்பாடுகளும், தற்காப்புக்கான ஆயுதங்கள் விற்பனைக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.
இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான வணிக ஒப்பந்தம் உருவாக்கப்படவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் இருநாட்டுத் தலைவர்களும் பகிர்ந்து கொண்ட அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம் :