Home நாடு அபராதங்கள் அரசாங்கம் நிர்ணயித்த வழிகாட்டுதல்களின்படி இருக்க வேண்டும்!

அபராதங்கள் அரசாங்கம் நிர்ணயித்த வழிகாட்டுதல்களின்படி இருக்க வேண்டும்!

417
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் கீழ் அபராதங்களை வெளியிடுவது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணக்கமாக அமல்படுத்துவதில் அதிகாரிகளுக்கு வழிகாட்ட, விதிக்கப்பட வேண்டிய அபராத அளவு மற்றும் குறைப்பு விகிதம் குறித்து அரசாங்கம் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது என்றார்.

“வழிகாட்டுதல்களின்படி, உரிமம் வைத்திருப்பவர் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இயக்க நேரங்களுக்கு இணங்கத் தவறும் வளாகத்தின் உரிமையாளர்கள் குற்றத்தைச் செய்திருந்தால், அதிகபட்சமாக 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்க முடியும்.

#TamilSchoolmychoice

“குற்றவாளிகள் ஏழு நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தினால் 50 விழுக்காடு குறைப்பும், 14 நாட்களுக்குள் பணம் செலுத்தப்பட்டால் 25 விழுக்காடு குறைப்பும் வழங்கப்படும், ” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நாட்டில் கொவிட் -19 பரவுவதற்கு காரணமான நடவடிக்கைகளுக்கு விதிக்கக்கூடிய அபராத விகிதத்தை அதிகரிக்க சட்டம் 342- இல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தக்கியுடின் கூறினார்.