Home நாடு ஜசெக : அடுத்த தலைமைச் செயலாளராகிறாரா அந்தோணி லோக்?

ஜசெக : அடுத்த தலைமைச் செயலாளராகிறாரா அந்தோணி லோக்?

689
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஜசெகவின் தலைமைச் செயலாளராக கடந்த 17 ஆண்டுகளாக இருந்து வரும் லிம் குவான் எங் மீண்டும் அந்தப் பதவியை ஏற்க மாட்டார் என்ற ஆரூடங்கள் பரவி வருகின்றன.

நீண்ட காலமாக மற்றவர்களுக்கு வழிவிடாமல் ஒரே பதவியில் இருந்து வருவது, புதிய, இளைய தலைமைத்துவத்திற்கு வழிவிடுவது, தன்னைச் சுற்றியிருக்கும் விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது போன்ற காரணங்களுக்காக லிம் குவான் தனது நடப்புப் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போது நடப்பு அமைப்புச் செயலாளராக இருக்கும் அந்தோணி லோக், லிம் குவாங் எங்கிற்கு சரியான மாற்றாக கட்சிக்காரர்களால் பார்க்கப்படுகின்றார்.

#TamilSchoolmychoice

நெகிரி செம்பிலான் ஜசெகவைத் திறம்பட வழிநடத்துவது, அங்கு பல தொகுதிகளில் வெற்றி பெற்றது, போக்குவரத்து அமைச்சராக திறம்பட பணியாற்றியது, நேர்மையான அணுகுமுறை என பல அம்சங்களால் அந்தோணி ஜசெகவில் மட்டுமின்றி கட்சிக்கு வெளியேயும் அரசியல் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார்.

அமைச்சராக இருந்தபோது ஒருமுறை தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கைப்பேசியை மேடையிலேயே நாகரிகமாக நிராகரித்தார் அந்தோணி லோக். “500 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட விலையுள்ள அன்பளிப்புப் பொருட்களை நான் பெறக் கூடாது” என மறுத்து ஊழலுக்கு எதிரான ஒரு பண்பான அணுகுமுறையைக் கையாண்டார்.

இந்நிலையில் இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் எனக்கு வழங்கப்பட்டால் ஜசெகவின் தலைமைச் செயலாளர் பொறுப்பை ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாகவும் 44 வயது அந்தோணி லோக் அறிவித்திருக்கிறார்.