Home நாடு கொவிட்-19 தடுப்பூசி பெற மாவட்ட, மாநிலங்களை கடக்க அனுமதி

கொவிட்-19 தடுப்பூசி பெற மாவட்ட, மாநிலங்களை கடக்க அனுமதி

431
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி பெறுவதற்காக மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை கடக்க வேண்டிய நபர்கள் காவல் துறையினரின் அனுமதி கடிதத்திற்கு விண்ணப்பிக்க தேவையில்லை.

தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறுகையில், சாலை தடுப்புகளில் மைசெஜாதெரா செயலி, வலைத்தளம் அல்லது குறுஞ்செய்தி மூலம் பெறப்பட்ட அனுமதி விவரங்களை மட்டுமே காட்ட வேண்டும் என்று கூறினார்.

சிலாங்கூரில் பல மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மே 6 முதல் 17 வரை உலு லங்காட், பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகியவை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் வைக்கப்படும்.