Home நாடு நம்பிக்கை கூட்டணி ஒன்பது குழுக்களை அமைத்துள்ளது

நம்பிக்கை கூட்டணி ஒன்பது குழுக்களை அமைத்துள்ளது

440
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி மத்திய அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட மூன்றாம் ஆண்டு நினைவு நாளில், கூட்டணி கட்சிகளின் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் மூன்று அங்கக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களைக் கொண்ட பல குழுக்களை அது அறிவித்துள்ளது.

கல்வி, சுகாதாரம், சட்டம், பொருளாதாரம், பாதுகாப்பு, பாலினம், இளைஞர்கள், வாழ்க்கைச் செலவு மற்றும் அணிதிரட்டல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒன்பது குழுக்களுக்கு பெயரிடப்பட்டுள்ளன.

“இன்று (மே 9) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அரசாங்கத்தை ஜனநாயக ரீதியாக மாற்ற மலேசியர்கள் வாக்களித்தபோது வரலாறு உருவாக்கப்பட்டது என்பதை உலகம் கண்டது. பயமும், அதிர்ச்சியும் மறக்க முடியாத மகிழ்ச்சியாக மாறியது.

#TamilSchoolmychoice

“இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொவிட் -19 பாதித்த முதல் அலை நேரத்தில், துரோகிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள் ஒன்று சேர்ந்து நாசவேலை, துரோகம் போன்ற செயல்களின் மூலம் பின் கதவு அரசாங்கத்தை நிறுவினர்.

“இன்று, அரசாங்கத்தால் நாட்டை வழிநடத்த முடியாது என்பதையும், அரசியல் ரீதியாகவும், இந்த அரசாங்கம் நிலையற்ற சிறுபான்மை அரசாங்கமாகவே உள்ளது,” என்று பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், ஜசெக தேசிய அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் மற்றும் அமானா பொதுச் செயலாளர் ஹத்தா ராம்லி ஒரு கூட்டு அறிக்கையில் கூறினார்.

கல்விக்குழுவிற்கு முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தலைமை தாங்க உள்ளார், இதில் நிக் நஸ்மி நிக் அகமட், தியோ நீ சிங் மற்றும் ஹசான் பஹாரோம் ஆகியோர் இடம் பெறுவர்.

சுகாதாரக் குழுவிற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் தலைமை தாங்குகிறார். டாக்டர் லீ பூன் சாய், டாக்டர் கெல்வின் யி, ஹத்தா, சிம் ட்சின் மற்றும் ஓங் கியான் மிங் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பொருளாதாரக் குழுவில் சுல்கிப்ளி, வோங் சென் மற்றும் டோனி புவா ஆகியோர் அடங்குவர்.

பாதுகாப்பு குழுவில் அமானா தலைவர் முகமட் சாபு, லீவ் சின் டோங் மற்றும் ஜோஹரி அப்துல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிகேஆரின் புசியா சல்லே, ஜசெக சோங் எங் மற்றும் செனட்டர் அய்மான் அதிரா ஆகியோர் பாலினக் குழுவில் அங்கம் வகிப்பார்கள்.

மூன்று கட்சியின் இளைஞர் தலைவர்களான அக்மல் நசீர், ஹோவர்ட் லீ மற்றும் ஷஸ்னி முனீர் ஆகியோர் இளைஞர் குழுவில் இருப்பர். வாழ்க்கை செலவுக் குழுவில் பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம், அமானா ஹசனுடின் முகமட் யூனுஸ் மற்றும் சரவாக் ஜசெக தலைவர் சோங் சியாங் ஜென் ஆகியோர் உள்ளனர்.

சட்டக் குழுவில் ஹனிபா மைடின், வில்லியம் லியோங் மற்றும் ராம்கர்பால் சிங் ஆகியோர் உள்ளனர்.