Home நாடு மருத்துவ சிகிச்சைக்கு காவல் துறை அனுமதி தேவையில்லை

மருத்துவ சிகிச்சைக்கு காவல் துறை அனுமதி தேவையில்லை

460
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மருத்துவ சிகிச்சைக்கான பயணத்திற்கு காவல் துறை அனுமதி பெற வேண்டிய தேவையை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரிகளுக்கு சந்திப்பு அட்டையை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“முன்னதாக, சிகிச்சைக்காக காவல் துறை அனுமதி கடிதம் அல்லது மருத்துவமனை அல்லது கிளினிக்கில் சந்திப்பு பெற வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களிடமிருந்து அரசாங்கத்திற்கு புகார்கள் வந்துள்ளன.

#TamilSchoolmychoice

“இது அவர்களுக்கு குறிப்பாக புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் போன்ற திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

“மருத்துவரை சந்திக்க மற்றும் திட்டமிடப்பட்ட சிகிச்சையைப் பெற்ற நோயாளிகள், சந்திப்பு அட்டையை சமர்ப்பித்தால் போதும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட மற்றும் மாநில எல்லைகளைக் கடக்கும் தடை இன்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.