Home நாடு மக்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை அவசியமாக பின்பற்ற வேண்டும்!

மக்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை அவசியமாக பின்பற்ற வேண்டும்!

451
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், நாடு கடுமையான சுகாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். மேலும் இந்த நோன்பு பெருநாளுக்கு பிற வீடுகளுக்கு வருகை தருவதை தவிர்க்கவும் அவர் மலேசியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்தியாவிலும் பிரேசிலிலும் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியைத் தடுக்க அரசியல்வாதிகள் உட்பட அனைவரையும் தங்கள் பங்கை செயல்படுத்துமாறு இன்று முகநூல் வாயிலாக ஒரு காணொலியில் அவர் கேட்டுக்கொண்டார்.

“நோன்பு பெருநாளுக்கு கூடுவது முக்கியமல்ல. நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்கக்கூடாது. நமக்கு நோய்த்தொற்று ஏற்படலாம் அல்லது தொற்றுநோயை (மற்றவர்களுக்கு) அனுப்பலாம் என்பதால் இது நல்ல நேரம் அல்ல,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட்-19 தொற்றை தடுக்க மக்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று மகாதீர் கூறினார்.

தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார். இது சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

“இதன் காரணமாக, பொதுமக்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் தொற்று பரவுவதைத் தடுக்க கூடல் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீட்டிலேயே இருங்கள். நாம் உணவை வாங்க வேண்டியிருக்கலாம், ஆனால் உணவை இயங்கலையில் வாங்கலாம், சந்தைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும். உணவு மற்றும் பணம் இல்லாதவர்களுக்கு அரசாங்கம் உதவும் என்று நம்புகிறேன், எனவே அவர்களின் சுமையை குறைக்க முடியும், ” என்று அவர் மேலும் கூறினார்.