Home நாடு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு : பேரங்காடிகளில் குவியும் மக்கள்

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு : பேரங்காடிகளில் குவியும் மக்கள்

679
0
SHARE
Ad

covid-EMCO-barbed wireகோலாலம்பூர் : எதிர்வரும் ஜூலை 3-ஆம் தேதி முதற்கொண்டு ஜூலை 16-ஆம் தேதி வரையில் கிள்ளான் பள்ளத்தாக்கின் பெரும்பான்மையான பகுதிகள் “கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்” கீழ் வருகின்றன என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 2) முதல் காலையிலேயே பேரங்காடிகளிலும், கடைகளிலும் மக்கள் குவிந்து, பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிள்ளான் பள்ளத்தாக்கில் அத்தியாவசியமான முக்கியத் தொழிற்சாலைகள் மட்டுமே இந்த காலகட்டத்தில் இயங்க முடியும்.

#TamilSchoolmychoice

அரிசி, ரொட்டி, சீனி, சமையல் எண்ணெய், கோதுமை, பால், குழந்தைகளுக்கான உணவு, மருந்துகள், முகக் கவரிகள் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டுமே இந்தக் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலகட்டத்தில் இயங்க முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்படும் இந்த வட்டாரங்களில் ஒவ்வொரு 100,000 எண்ணிக்கை கொண்ட மக்கள் தொகைக்கும் 12.1 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

அதன் காரணமாகவே, இந்த வட்டாரங்கள் கடுமையாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாது. அப்படியே வெளியேறினாலும் ஒரு தடவைக்கு ஒரே ஒரு நபர் மட்டுமே வெளியேற முடியும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், சுகாதாரக் காரணங்களுக்காகவும் மட்டுமே அந்த ஒரு நபரும் வெளியேற முடியும். 10 கிலோமீட்டர் தூரத்திற்குள்தான் அவர்கள் பயணம் செய்ய முடியும்.

இரவு 8.00 மணிக்குப் பின்னர் யாரும் இல்லங்களில் இருந்து வெளியேற முடியாது.

எனவே, கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகள் இந்தக் கடுமையாக்கப்பட்ட வட்டாரங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனவா என்பது குறித்து பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.