Home நாடு நூர் ஹிஷாம் பதவி விலக வேண்டுமா? இணையத் தளங்களில் விவாதம்!

நூர் ஹிஷாம் பதவி விலக வேண்டுமா? இணையத் தளங்களில் விவாதம்!

574
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொவிட்-19 தொற்று தொடர்பில் தலைமைப் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வந்திருப்பவர் சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம்.

ஆனால், இன்றளவும் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஒவ்வொரு முறையும் மக்களை மட்டுமே குறை சொல்லும் நூர் ஹிஷாம்  தொற்றுகளைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு என்ன செய்கிறது என்பது பற்றி அதிகமாகப் பகிர்வதில்லை.

தொற்றுகளின் எண்ணிக்கைக்கு காரணம் மட்டும் புதிது புதிதாகக் கண்டுபிடித்துச் சொல்லிக் கொண்டே இருப்பார்.

#TamilSchoolmychoice

ஆகக் கடைசியாக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கூட தடுப்பூசிகளை அதிகமாகச் செலுத்தி நாட்டின் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினருக்கு போட்டுவிட்டால் தொற்று குறைந்து விடும் எனக்கூறியிருந்தார்.

மேலும் அரசாங்கத்திற்கு ஆதரவாக, அவர்களின் நோக்கங்களுக்கு ஏற்ப செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் அடிக்கடி அவர் மீது வைக்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் அமைச்சர் அஸ்மின் அலியின் முன்னாள் பத்திரிகைச் செயலாளரான அட்லின் எம்.சாப்ரி என்பவர், நூர் ஹிஷாம் தனக்குத் தெரிந்த அறுவைச் சிகிச்சை மருத்துவத் தொழிலுக்குத் திரும்பிச் செல்வதே நல்லது என்றும், தலைமை இயக்குநர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து  இணையவாசிகளில் பலர் நூர் ஹிஷாமுக்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனர். அவரின் நடவடிக்கைகளைப் பலரும் தற்காத்து வருகின்றனர்.

முறையாகத் திட்டமிடல் இல்லாமல் அவர் செயல்படுகிறார் எனவும் குறைகூறல்கள் எழுந்துள்ளன.