Home நாடு மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணன், புதிய பிரதமருக்கு வரவேற்பு

மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணன், புதிய பிரதமருக்கு வரவேற்பு

867
0
SHARE
Ad
மைக்கி தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்

கோலாலம்பூர் : நாட்டின் 9-வது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் நியமனத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கும் மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனம் அவரின் நியமனத்தை வரவேற்றிருக்கிறது.

நாட்டின் 9-வது பிரதமராகப் பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அவர்களுக்கு மைக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மைக்கியின் தேசியத்  தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் (படம்) தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோயைத் தடுக்க அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மைக்கி உறுதுணையாக நிற்கும் என அவர் தெரிவித்தார்.

“‘மலேசிய குடும்பம்’ எனும் கோட்பாடுடன் பிரதமர் ஆற்றிய உரை இக்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. நம் நாடு பல்லின மக்களும், பல கலாச்சாரங்களும் உடையது. நாம் அனைவரும் ஒன்றினைத்து செயல்பட்டால் மட்டுமே இந்த கோவிட்-19 தொற்றுநோயில் இருந்து விடுபட முடியும். மைக்கி ‘மலேசிய குடும்பம்’ கருத்தாக்கத்தில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வரவேற்கிறது” என்றும் கோபாலகிருஷ்ணன் மைக்கி சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பிரதமர் கூறியதுபோல், அனைத்து தரப்பினரது கருத்துக்களையும் அரசாங்கம் கண்டறிய வேண்டும். இதன் மூலம் நமது நாட்டின் சுகாதாரத்துறையை வலிமையாக்க முடியும். நம் நாடு வலுவாக இருந்தால் மட்டுமே நாம் பொருளாதாரத்தில் முன்னேற முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய வணிகர்களும் பொருளாதாரத்தில் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். மைக்கி தொடர்ச்சியாக இதன் தொடர்பாக அரசாங்க நிறுவனங்களுடனும், அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்துள்ளது. நம் இந்திய வணிகர்கள் படும் இன்னல்களையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஆகையால், தேசிய மீட்சித் வியூகத் திட்டம் மற்றும் கோவிட்-19 கையாளும் சிறப்பு குழுவில் அனைத்து வர்த்தக அமைப்புகளையும் இணைத்து  அரசாங்கம் செயல்பட வேண்டும் என கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.