Home நாடு முருகையா – “பிரதமர்-எதிர்கட்சித் தலைவர்கள் சந்திப்பு பாராட்டுக்குரியது”

முருகையா – “பிரதமர்-எதிர்கட்சித் தலைவர்கள் சந்திப்பு பாராட்டுக்குரியது”

977
0
SHARE
Ad
டத்தோ டி.முருகையா

கோலாலம்பூர் : நாட்டு மக்களின் நலன்களுக்காக, எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து, பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியதற்காக மஇகாவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இஸ்மாயில் சாப்ரி முன்வைத்துள்ள “ஒரே மலேசியக் குடும்பம்” என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே புள்ளியில் கருத்திணக்கம் கொள்வதும், அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு காண வேண்டியதும் அவசியமாகும் என்றும் முருகையா வலியுறுத்தினார்.

இந்தப் புதிய அணுகுமுறையை முன்னெடுத்த பிரதமர் இஸ்மாயில் சாப்ரி பாராட்டுக்குரியவர். அதே வேளையில் பிரதமரின் முன்னெடுப்பை ஆதரித்து அவருடன் கலந்துரையாடலில் பங்கு பெற்றதற்காக எதிர் கட்சித் தலைவர்களும் நமது பாராட்டுக்குரியவர்கள் என்றும் முருகையா மேலும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“நாம் நமது 64-வது தேசிய தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் நமது மூதாதையர்கள் தியாகத்தாலும், ஒற்றுமையாலும் நமக்குப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் மறந்து விடக்கூடாது. தனிநபர் நலன்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து பிளவுபட்டுக் கிடப்பதை விட ஒன்றுபட்டு முன்னேற வேண்டியது அவசியமாகும்” என்றும் முருகையா இதன் தொடர்பில் விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.

மலேசியர்களை ஒன்றுபடுத்துவதற்காக பிரதமர் முன்மொழிந்திருக்கும் “ஒரே மலேசியக் குடும்பம்” என்ற சித்தாந்தமும் பாராட்டுக்குரிய ஒன்றாகும் என முருகையா குறிப்பிட்டார்.