Home நாடு மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்படுமா?

மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்படுமா?

539
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மைய சில மாதங்களாக கடுமையானக் குறை கூறல்களுக்கும், சாடல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது மித்ரா. ஏற்கனவே, பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்த மித்ரா, மொகிதின் யாசின் பிரதமராக இருந்தபோது, ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற மஇகாவின் 75-வது தேசியப் பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மித்ராவை மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்பட அனுமதித்தால், அந்தப் பிரிவு சிறப்பாகச் செயல்பட முடியும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதத்தில் பேசிய பிரதமர், இதுகுறித்து நடப்பு ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக்குடன் பேசுவேன் என உறுதியளித்தார்.

#TamilSchoolmychoice

மித்ரா தற்போது ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது.

இதற்கிடையில் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு மீண்டும் அமைக்கப்படுவதாகவும் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி நேற்று அறிவித்தார்.

முன்னாள் பிரதமர் நஜிப் காலத்தில் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. அப்போதைய பிரதமரான நஜிப்பே அந்தக் குழுவுக்குத் தலைமையேற்றார்.

அதே போன்று மீண்டும் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு தோற்றுவிக்கப்பட வேண்டுமென மஇகாவின் தேசியப் பொதுப் பேரவையில் உரையாற்றும்போது மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அந்தக் கோரிக்கைக்கு ஏற்ப, விரைவில் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு அமைக்கப்படும் என இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார்.