Home நாடு ‘கனியும் மணியும்’ குழந்தைகளுக்கான செயலியின் அனைத்துலக வெளியீடு

‘கனியும் மணியும்’ குழந்தைகளுக்கான செயலியின் அனைத்துலக வெளியீடு

2177
0
SHARE
Ad

கனியும் மணியும்என்னும் ஊடாடும் உயிர் ஓவியக் கதைகளையும் விளையாட்டுகளையும் கொண்ட குழந்தைகளுக்கான செயலியை, அனைத்துலகப் பயன்பாட்டுக்காக வெளியிட முரசு நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

2019ஆம் ஆண்டுப் பொங்கல் அன்று சிங்கப்பூரில் வெளியிடப்பெற்ற இந்தச் செயலி, சில மேம்பாடுகளைக் கொண்டு இரண்டாம் பதிகையாக இவ்வாண்டுப் பொங்கலை ஒட்டி வெளிவருகிறது.

கஸ்தூரி இராமலிங்கம் – முத்து நெடுமாறன்

கணிஞர் முத்து நெடுமாறனும் ஆசிரியர் கஸ்தூரி இராமலிங்கமும் இணைந்து உருவாக்கிய இந்தச் செயலியின் ஆய்வுகள் பல உலக மாநாடுகளில் படைக்கப்பெற்று பல அறிஞர்களின் வரவேற்பைப் பெற்றன.

#TamilSchoolmychoice

வரும் சனவரி 15ஆம் நாள் சனிக்கிழமை, இரவு 7.00மணிக்கு இயங்கலை வழி நடைபெறும் வெளியீட்டு நிகழ்ச்சியில் கல்வியாளர் பேராசிரியர் என். எஸ். இராசேந்திரன் அவர்கள் முகாமை உரை ஆற்றுவார். மேநாள் சிறப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் திரு இனியன், செயலியைப் பற்றிய ஆய்வுரை வழங்குவார்.

கல்வியாளர் இனியன்

இவர்களோடு, சிங்கப்பூர்த் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் செயற்குழுத் தலைவர் திருவாட்டி மும்தாஸ், கனிமணி செயலியின் சிங்கப்பூர் அனுபவங்களைப் பகிர்வார்.

 செயலியில் உள்ள கதைகளும் விளையாட்டுகளும், குழந்தைகள் எளிமையாகவும் மகிழ்ச்சியோடும் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளத் துணைசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அழகான படங்களோடு உருவாக்கிப் படைக்கப்பட்ட விளையாட்டுகள், குழந்தைகளைக் கவர்ந்து ஈர்த்தும், கற்றலில் ஆவலோடு ஈடுபடவும் செய்கின்றனஎன்று முத்து நெடுமாறனும் கஸ்தூரியும் கூறினர்.

பேராசிரியர் என்.எஸ்.இராசேந்திரன்

மொழிக்கற்றலின் பயன், அதிலும் பன்மொழித்திறமையால் ஏற்படும் நன்மைகள், வாசிப்புத்திறனின் அவசியம் முதலான தலைப்புகளில் உரைகளைக் கேட்பதோடு, கனியும் மணியும் செயலியில் உள்ள சிறப்புக் கூறுகளின் செயல்முறைக் காட்சிகளும் நிகழ்ச்சியில் காணலாம்.

செயலியை உருவாக்கிய முத்து நெடுமாறனும் கஸ்தூரி இராமலிங்கமும் நிகழ்ச்சியை வழிநடத்துவர். இணையத்தில் youtube.com/sellinam எனும் முகவரியில் உள்ள செல்லினம் யூடியூப் அலைவரிசையிலும், fb.com/mozikkalvi எனும் முகவரியில் உள்ள மொழிக்கல்வி முகநூல் பக்கத்திலும் நிகழ்ச்சியைக் கண்டு களிக்கலாம்.