கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை மாமன்னரைச் சந்தித்த பிரதமர் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் – தேதிகள் குறித்து விவாதித்ததாக நம்பப்படுகிறது.
அரண்மனை வளாகத்தில் பிற்பகல் 3.49 மணியளவில் நுழைந்த பிரதமரின் வாகனம் 4.45 மணியளவில் அங்கிருந்து வெளியேறியது.
மிக சுமுகமாக நடைபெற்ற அந்தச் சந்திப்பு வழக்கமான ஒன்று எனவும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
மாமன்னரைச் சந்தித்த பின்னர் பிரதமர் அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியைச் சந்தித்தார்.
இதற்கிடையில் நாளை வெள்ளிக்கிழமை வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.
எனவே, நாளை வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.