Home நாடு 4 புதிய செனட்டர்கள் பதவியேற்றனர்

4 புதிய செனட்டர்கள் பதவியேற்றனர்

729
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 2) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த புதிய அமைச்சரவையில் பதவியேற்கவிருக்கும் 4 அமைச்சர்கள் இன்று சனிக்கிழமை காலை செனட்டர்களாகப் பதவியேற்றனர்.

உள்துறை அமைச்சராகப் பதவியேற்கும் சைபுடின் நசுத்தியோன், அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்கும் தெங்கு சப்ருல் அசிஸ், வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சாம்ரி பின் அப்துல் காடிர், இஸ்லாமிய சமய விவகாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கும் முகமட் நைம் பின் ஹாஜி மொக்தார் ஆகியோரே அந்த நால்வராவர்.

சைபுடின் நசுத்தியோன் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியின் தலைமைச் செயலாளராவார். (கெடா) கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி கண்டவர் நசுத்தியோன்.

#TamilSchoolmychoice

தெங்கு சப்ருல் கோலசிலாங்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி கண்டவர். சாம்ரி பின் அப்துல் காடிர் பேராக் லுமுட் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.