புத்ரா ஜெயா : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணியளவில் அறிவித்த துணையமைச்சர்கள் பட்டியலில் இரு இந்தியர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையும் இந்திய சமூகத்தில் பெரும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தாப்பா நாடாளுமன்றத்திற்கு பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வி கண்ட வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி தொழில் முனைவர் மேம்பாடு கூட்டுறவுக் கழகங்களுக்கான துணையமைச்சர் பொறுப்பை ஏற்கிறார்.
ஜசெக சார்பில் மற்றொரு துணையமைச்சராக ராம் கர்ப்பால் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் சட்டத்துறை, கட்டமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பிரதமர் துறை அமைச்சில் துணையமைச்சராக நியமனம் பெற்றிருக்கிறார்.