Home நாடு சிவகுமார் மீதான விசாரணை என்னவானது? மீண்டும் பணிக்குத் திரும்பிய உதவியாளர்கள்! பெர்சாத்து கேள்விக் கணை

சிவகுமார் மீதான விசாரணை என்னவானது? மீண்டும் பணிக்குத் திரும்பிய உதவியாளர்கள்! பெர்சாத்து கேள்விக் கணை

868
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மனித வள அமைச்சர் வி. சிவகுமார் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அறிவிக்கும்படி பெர்சாத்து கட்சி கேள்விக் கணை தொடுத்துள்ளது.

அந்தக் கட்சியின் இணைப் பிரிவின் தகவல் பொறுப்பாளர் எஸ்.சுப்பிரமணியம் இந்தக் கேள்வியைத் தொடுத்துள்ளார்.

காரணம், ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்ட சிவகுமாரின் உதவியாளர்கள் இருவர், தடுப்புக் காவலுக்குப் பின்னர் மீண்டும் அதிகாரபூர்வ பணிக்குத் திரும்பியுள்ளதாக சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அதாவது தாயும் மகனும் என இரு உதவியாளர்கள் மீண்டும் தங்களின் பணிக்குத் திரும்பியுள்ளதால் விசாரணையின் முடிவு என்ன என்பதை ஊழல் தடுப்பு ஆணையம் அறிவிக்க வேண்டும் எனவும் சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.