Home இந்தியா பாஜகவின் 9 வேட்பாளர்கள் : கோவையில் அண்ணாமலை! தென் சென்னையில் தமிழிசை! கன்னியாகுமரியில் பொன்.இராதாகிருஷ்ணன்!

பாஜகவின் 9 வேட்பாளர்கள் : கோவையில் அண்ணாமலை! தென் சென்னையில் தமிழிசை! கன்னியாகுமரியில் பொன்.இராதாகிருஷ்ணன்!

299
0
SHARE
Ad
பொன்.இராதாகிருஷ்ணன்

சென்னை : நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஜக முதற்கட்டமாக 9 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.

தென்சென்னை – தமிழிசை
மத்திய சென்னை – வினோஜ் செல்வம்
வேலூர் – ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி – நரசிம்மன்
நீலகிரி – எல்.முருகன்
கோவை – அண்ணாமலை
பெரம்பலூர் – பாரிவேந்தர் (இ.ஜ.க)
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி – பொன் ராதாகிருஷ்ணன்

அதன்படி 9 வேட்பாளர்களை பாஜக தமிழ் நாட்டில் அறிவித்திருக்கிறது. கன்னியாகுமரி தொகுதியில் பொன்.இராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

எதிர்பார்த்தபடி தென் சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார்.

திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். முதலில் அவர் தூத்துக்குடியில் போட்டியிடுவார் என அறிவக்கப்பட்டு பின்னர் மாற்றம் செய்யப்பட்டது. நெல்லை சட்டமன்ற உறுப்பினராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார்.

இதன் மூலம் பாஜகவில் இணைந்த ராதிகா சரத்குமார் தூத்துக்குடியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவதும் புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம் சில மாதங்களுக்கு முன்னர்தான் அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அண்ணாமலை

தமிழ் நாடு பாஜக தலைவரான அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். அவர் சார்ந்த சமூக வாக்குகள் – அண்மையில் பிரதமர் மோடி மேற்கொண்ட பிரச்சாரங்கள் – ஆகியவற்றின் காரணமாக அண்ணாமலைக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்திருப்பதாக கணிக்கப்படுகிறது.