Home நாடு மாமன்னர் உத்தரவு : தீவிரவாதக் கருத்துகளை நிறுத்துங்கள்!

மாமன்னர் உத்தரவு : தீவிரவாதக் கருத்துகளை நிறுத்துங்கள்!

311
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களும் தீவிரவாதக் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டுமென மாமன்னர் சுல்தான் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) அம்னோவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான், அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் டாக்டர் அக்மால் சாலே, மலாக்கா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ரவுப் யூசோ, ஜசெக துணைத் தலைமைச் செயலாளர் லியூ சின் தோங் ஆகியோரைச் சந்தித்த பின்னர் மாமன்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மாமன்னரின் சந்திப்புக்குப் பின்னர், அக்மால் சாலே தேசிய அளவில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டுவர தான் ஒத்துழைக்கப் போவதாக தன் முகநூலில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

ஜசெக, அம்னோ மட்டுமின்றி எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்றும் மதம், இனம் ரீதியான சர்ச்சையானக் கருத்துகளை வெளியிடக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.