Home நாடு மஸ்ஜிட் இந்தியா சாலைக் குழி: விஜயலெட்சுமி கிடைக்கும்வரை தேடும் பணி தொடரும்!

மஸ்ஜிட் இந்தியா சாலைக் குழி: விஜயலெட்சுமி கிடைக்கும்வரை தேடும் பணி தொடரும்!

362
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜித் இந்தியா வளாகத்தில் விஜயலெட்சுமி என்ற இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்மணி தவறுதலாக சாலையோரக் குழியில் விழுந்ததைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. எனினும் அவரின் நல்லுடல் கிடைக்கும்வரை அவரைத் தேடும்பணி நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்தியாவைச் சேர்ந்த அந்தப் பெண்மணியின் குடும்பத்தினருக்கான குடிநுழைவு (விசா) கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குழிக்குள் விழுந்த பெண்மணியின் செருப்புகள் மட்டும் கிடைத்த நிலையில் அந்தப் பெண்ணைத் தேடுவதற்கு முக்குளிப்பு வீரர்கள் (டைவர்ஸ்) பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

#TamilSchoolmychoice

மேலும் விஜயலெட்சுமியைத் தேடும் பணிகளில் மேலும் தீவிரம் காட்டும் விதத்தில் குறுக்கிடும் பாறைகளை உடைப்பதற்கும், உடைபட்ட பாறைத் துகள்களை அகற்றுவதற்கும், அதிக சக்திவாய்ந்த இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இதற்கிடையில் பொதுமக்கள் மஸ்ஜிட் இந்தியா பகுதியைத் தவிர்க்க முற்பட்டுள்ளதால், அங்கு வணிகங்கள் பாதிக்கப்பட்டதாக அங்கு வணிகம் செய்பவர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

8 மீட்டர் ஆழமுள்ள அந்தக் குழியில் விழுந்த 48 வயது இந்தியப் பெண்மணி  விஜயலெட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது, திடீரெனத் தோன்றிய சாலையோரக் குழியில் அவர் தவறி விழுந்தார்.