புதுடில்லி: திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சொத்துக் குவிப்பு வழக்குகளின் மறுவிசாரணைகள் தொடரப்படுவதற்கு இந்திய உச்ச நீதிமன்றத் தடை விதித்துள்ளது.
இந்த வழக்குகளின் மறு விசாரணை தொடர்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்தது. எனினும் அவ்வாறு அனுமதித்த வழக்கில் நீதிமன்ற நடைமுறைகளும், சட்ட விதிகளும் முறையாகப் பின்பற்றப்படவில்லை என தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வழக்குகளின் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது.
2006-2011 தவணைக்கான திமுக ஆட்சிக்காலத்தில் (2006 – 2011) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோர் தங்களின் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.