Home கலை உலகம் ரஜினிகாந்த் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதி!

ரஜினிகாந்த் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதி!

230
0
SHARE
Ad

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 30) மாலை சென்னையிலுள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரால் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் தேவைப்படும் சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்கு அறுவை சிகிச்சை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

ரஜினி நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 10-ஆம் திரையீடு காணவிருக்கிறது. தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் ரஜினி நலமாக இருப்பதாகவும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.