Home நாடு தொழிலாளர் நலனுக்காக இன்னுயிர் தந்த இரண்டு தொழிற்சங்கவாதிகளை நினைவுகூரும் நிகழ்ச்சி

தொழிலாளர் நலனுக்காக இன்னுயிர் தந்த இரண்டு தொழிற்சங்கவாதிகளை நினைவுகூரும் நிகழ்ச்சி

161
0
SHARE
Ad
மலாயா கணபதி

ரவாங்: மே 1 தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டிருக்கும் தருணத்தில், கடந்த காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலனுக்காகப் போராடித் தங்களின் இன்னுயிரைத் தந்த இரண்டு தொழிற்சங்கவாதிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணிவரை ரவாங் ஜாலான் யாப் வூன் சோங் சாலையிலுள்ள டத்தாரான் பத்து ஆராங் (பத்து ஆராங் முன்னாள் நிலக்கரி சுரங்க தொழிலாளர்களுக்கான விளையாட்டு மையத்தில் – Former Coal Mine Workers’ Sports Club, Dataran Batu Arang, Jalan Yap Voon Chong, 48100 Batu Arang, Rawang, Selangor) நடைபெறுகிறது.

மலாயா கணபதி, பி.வீரசேனன் ஆகிய இருவரும்தான் நினைவுகூரப்படும் அந்த போராட்டத் தொழிற்சங்கவாதிகள்.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னால் நம் நாட்டின் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் வெற்றி பெற்று, இன்று நம் தொழிலாளர்களில் நிலை எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதைக் கண்ணோட்டமிடும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமையும்.

#TamilSchoolmychoice

அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்ட தொழிற்சங்கப் போராளியான மலாயா கணபதி தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்ட பகுதி என்ற முறையிலும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர் கூட்டங்களில் அவர் இங்கு உரையாற்றினார் என்பதாலும், பத்து ஆராங் சிறப்பு பெறுகிறது. அதன் காரணமாகவே, நாளைய நிகழ்ச்சி பத்து ஆராங் வட்டாரத்தில் நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக பாரம்பரிய நடைப் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: திரு.எண்டி (பிகேஆர்) ‪+60162424189; திரு.கோ (பிஆர்எம்) ‪+60122766551; சந்திரா (சயாம் மரண ரயில்வே ஆர்வலர் குழு) ‪+60178887221