Home நாடு கெடா மாநில மந்திரி பெசாராக முக்ரீஸ் நியமனம் – இன்று பிற்பகல் 3 மணியளவில் பதவி...

கெடா மாநில மந்திரி பெசாராக முக்ரீஸ் நியமனம் – இன்று பிற்பகல் 3 மணியளவில் பதவி ஏற்பு

473
0
SHARE
Ad

MUKIRZZஅலோர் ஸ்டார், மே 6 – கெடா மாநில தேசிய முன்னணியின் துணைத் தலைவரான முக்ரிஸ் மகாதீர், இன்று பிற்பகல் 3 மணியளவில் இஸ்தானா அனாக் புக்கிட்டில் அம்மாநில மந்திரி பெசாராகப் பதவி ஏற்கவுள்ளார்.

அவரது பதவி ஏற்பு குறித்த அதிகாரப்பூர்வ கடிதம் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிடமிருந்து, கெடா மாநில சுல்தான் துங்கு அனுவார் சுல்தான் பட்லிஷாவுக்கு அனுப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து முக்ரிஸ் கூறியிருப்பதாவது, “ நான் கெடா மாநில மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று புதிய அரசாங்கத்தை அமைத்திருக்கும் தேசிய முன்னணி, இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றும் என்று உறுதியளிக்கிறேன்.

#TamilSchoolmychoice

மேலும் கெடா மாநில மக்களின் தேவைகள் அனைத்தையும் அறிந்து, அதற்கேற்றார் போல் தேசிய முன்னணி அரசாங்கம் திட்டங்களை அமைத்து, மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்” என்று அலோர் ஸ்டாரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு தேசிய முன்னணி மாநில அரசாங்கத்தைக் கைப்பற்ற காரணமாக இருந்த அனைத்து வாக்காளர்களுக்கும் தான் மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பொறுப்பை தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தல் முடிவின் படி, கெடா மாநிலத்தில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளில், தேசிய முன்னணி  21 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநில அரசாங்கத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.