Home 13வது பொதுத் தேர்தல் நாளை சிலாங்கூர் மந்திரி பெசாராக காலிட் பதவியேற்கின்றார்!

நாளை சிலாங்கூர் மந்திரி பெசாராக காலிட் பதவியேற்கின்றார்!

522
0
SHARE
Ad

Khalid Ibrahimஷா ஆலாம், மே 13 – சில நாட்களுக்கு நீடித்து வந்த இழுபறிக்குப் பின்னர், சுமுகமான தீர்வு ஏற்பட்டு நாளை சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இன்று சிலாங்கூர் சுல்தானை காலிட் சந்திப்பார் என்றும் அதன் பின்னர் நாளை பதவி பிரமாணம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்பதோடு, மற்ற ஏற்பாடுகளும் அறிவிக்கப்படும்.

கடந்த 2008ஆம் ஆண்டு சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவியேற்ற காலிட்டுக்கு இது இரண்டாவது தவணையாகும்.

நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 56 தொகுதிகளில் 44 தொகுதிகளை மக்கள் கூட்டணி கைப்பற்றியது. பாஸ் கட்சியும் ஜசெகவும் தலா 15 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில் பிகேஆர் 14 தொகுதிகளை வென்றது.

ஆட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு இந்தியர்கள் சார்பாக டாக்டர் சேவியர் ஜெயகுமார் மீண்டும் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜசெக சார்பாக போட்டியிட்டு வென்ற கணபதி ராவ் இந்த முறை ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டுள்ளது.

ஹிண்ட்ராப் போராட்டவாதியான கணபதி ராவ், உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்த ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களில் ஒருவராவார்.

இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளில் சேவியர் ஜெயகுமார் சிறந்த முறையில் சேவையாற்றி வந்திருப்பதாலும், தனது தொகுதியான ஸ்ரீ அண்டலாசில் மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பதாலும், அவரே ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியில் தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜசெக, கணபதி ராவ் பெயரையும் முன்மொழிந்தால், அதன் மூலம் இரண்டு இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இடம் பெறும் வாய்ப்புக்களும் உள்ளன.