Home உலகம் ஒபாமா சவுதி அரேபியா செல்லவுள்ளார்

ஒபாமா சவுதி அரேபியா செல்லவுள்ளார்

524
0
SHARE
Ad

obama

வாஷிங்டன், பிப்5 –  அமெரிக்கா – சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு குறித்து பேச்சு நடத்த அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா அடுத்த மாதம் சவுதி அரேபியா செல்ல உள்ளார்.

அமெரிக்கா – சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு குறித்து பேச்சு நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதி மன்னர் அப்துல்லாவை சந்தித்து பேசவுள்ளார்.

#TamilSchoolmychoice

ஒபாமாவின் பயணத்தின் போது இருநாட்டு உறவுகள், பாதுகாப்பு, அணு ஆயுத கொள்ளை, வர்த்தகம் போன்றவை குறித்து பேச்சு நடக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு முன், 2009ல் ஒபாமா சவுதி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.