Home நாடு மலேசியாகினி அலுவலகம் மீது சிவப்பு சாயம் வீச்சு! இறந்த வாத்து உடலும் கிடந்தது!

மலேசியாகினி அலுவலகம் மீது சிவப்பு சாயம் வீச்சு! இறந்த வாத்து உடலும் கிடந்தது!

835
0
SHARE
Ad

unnamed1கோலாலம்பூர், பிப் 25 – பங்சார் உத்தாமாவிலுள்ள மலேசியாகினி செய்தி இணையத்தள அலுவலகத்திற்கு முன் சிவப்பு நிற சாயமும், இறந்த வாத்தின் உடலையும் சில மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர்.

அலுவலக கட்டிடத்தின் மீது சிவப்பு நிற சாயத்தை தெளித்து விட்டு, இறந்த வாத்து ஒன்றின் உடலை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து நுழைவு வாயில் அருகே வீசி எறிந்துள்ளனர். அந்த அட்டைப் பெட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக்கின் படமும் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

மலேசியாகினியின்  கிராபிக் எடிட்டர் (Graphic editor) அஸ்லான் ஸாம்ஹரி இன்று காலை 6.15 மணிக்கு அலுவலகம் வந்த போது இதை பார்த்துள்ளார்.

#TamilSchoolmychoice

“5 பிளாஸ்டிக் பைகளில் இந்த சிவப்பு சாயத்தை நிரப்பி வீசியிருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக்கின் அலுவலகத்தில் இதே போன்ற சிவப்பு சாயம் ஊற்றப்பட்டு, இறந்த கோழியின் உடல் வீசப்பட்டிருந்தது.

மலேசியாகினி அலுவலகத்தின் மீது சிவப்பு சாயம் வீசப்பட்டதற்கு, தெரேசா கோக்கின் சீன புத்தாண்டு சர்ச்சைக்குரிய காணொளி குறித்து செய்தியை விரிவாக வெளியிட்டதற்கும், தெரேசாவை அறைபவர்களுக்கு சன்மானம் என்று கூறி கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.