Home உலகம் உக்ரைன் விவகாரம் – ரஷ்யாவுடனான விண்வெளி ஒப்பந்தங்களை ரத்து செய்தது நாசா!

உக்ரைன் விவகாரம் – ரஷ்யாவுடனான விண்வெளி ஒப்பந்தங்களை ரத்து செய்தது நாசா!

594
0
SHARE
Ad

nasa7515a732-36a7-4d7b-b689-4d4a117899a2_S_secvpfரஷ்யா, ஏப்ரல் 4 – உக்ரைன் விவகாரம் காரணமாக ரஷ்யாவுடனான விண்வெளி சார்ந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா அறிவித்துள்ளது.

எனினும், சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பான செயல்பாடுகளில் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்துடனான கூட்டு செயல்பாடுகள் தொடரும் என்றும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் நாசா குறிப்பிட்டுள்ளது.

இது குறித்த முதல் செய்தியாக, அமெரிக்க செய்தி நிறுவனமான ‘தி வெர்ஜ்’ –ல் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பாணையின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

மேலும், இரு நாடுகளிடையேயான விண்வெளி விஞ்ஞானிகளின் பயணங்களும், மின்னஞ்சல், தொலைத்தொடர்பு மாநாடுகள் மற்றும் காணொளிக் காட்சிகள் போன்ற நடைமுறைகளும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பான செயல்பாடுகளோ, ரஷியாவின் பங்களிப்புடன் அந்நாட்டுக்கு வெளியே மேற்கொள்ளப்படும் கூட்டங்களின் செயல்பாடுகளோ பாதிக்கப்படாது என்றும் அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில், அமெரிக்க-ரஷ்ய கூட்டுறவை பாதிக்கும் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை என நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன் கடந்த மாதம் 27-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.

ரஷியாவின் சோயுஸ் விண்கலம் மட்டுமே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வதற்கான ஒரே விண்வெளி ஓடமாக உள்ளது. அதில் பயணம் செய்யும் அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவருக்கு கட்டணமாக சுமார் 7 கோடி டாலரை ரஷ்யாவுக்கு அமெரிக்கா செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.