Home கலை உலகம் மூன்று நாள் படப்பிடிப்பிற்கு 1 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்!

மூன்று நாள் படப்பிடிப்பிற்கு 1 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்!

747
0
SHARE
Ad

sivakarthikeyan-upcoming-moசென்னை, ஏப்ரல் 7 – சின்னத்திரையில் அறிமுகமாகி, குறுகிய காலகட்டத்திலேயே முன்னனி நாயகர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

மனம் கொத்தி பறவை திரைப்படத்திலிருந்து மான் கராத்தே படம் வரை சிவகார்த்திகேயன் நடித்த படம் எல்லாம் வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் சிவகார்த்திகேயனின் மார்கெட் களைகட்டியிருக்கிறது.

#TamilSchoolmychoice

சமீபத்தில் பிரபல துணிக்கடை விளம்பரத்தில் நடிக்க விளம்பர நிறுவனம் சிவகார்த்திகேயனை அணுகியுள்ளது.

அதற்கு முதலில் மறுத்த சிவகார்த்திகேயன் சம்பளத்தை கேட்டதும் சம்மதம் சொல்லிவிட்டாராம். மூன்று நாள் படப்பிடிப்பிற்கு ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக கூறியிருக்கிறார்கள் விளம்பர நிறுவனத்தினர்.