Home நாடு ஆசிரம விவகாரம்: சட்ட நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது இண்ட்ராஃப்

ஆசிரம விவகாரம்: சட்ட நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது இண்ட்ராஃப்

594
0
SHARE
Ad

Hindrafகோலாலம்பூர், நவம்பர் 20  – விவேகானந்தா ஆசிரமம் தொடர்பான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் கைவிடுவதாக இண்ட்ராஃப் அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆசிரமத்தை பாரமபரியச் சின்னமாக அரசிதழில் அறிவிக்க வேண்டும் என்றும் இண்ட்ராஃப் கோரிக்கை விடுத்துள்ளது.

“விவேகானந்தா ஆசிரமத்தை தேசியப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கவும், இந்த அறிவிப்பை அரசிதழில் வெளியிடவும் சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரி அஜீசுக்கு அதிகாரம் உள்ளது. இதற்காக ஆசிரம அறங்காவலர்களுக்கு முன்னறிவிப்பாணை (நோட்டீஸ்) வழங்க வேண்டிய அவசியமில்லை.

#TamilSchoolmychoice

“பாரம்பரிய சின்னங்களுக்கான சட்டத்தின்படி, குறிப்பிட்ட ஒரு பாரம்பரிய சின்னத்தை காக்கும் விதமாக தன்னிச்சையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்படுவதற்கான அதிகாரம் அத்தகைய கட்டங்களுக்கப் பொறுப்பேற்றுள்ள அமைச்சருக்கு உள்ளது,” என இண்ட்ராஃப் தலைவர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், அரசுக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கையை இண்ட்ராஃப் நிறுத்தி வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விவேகானந்தா ஆசிரமத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பில் என்ன முன்னேற்றங்கள் ஏற்படுகிறது என்பதையும், அமைச்சு செயல்பாட்டையும் உன்னிப்பாக கவனிக்க உள்ளதாகக் கூறினார்.