Home தொழில் நுட்பம் ஐபோன் 7 பற்றிய ஆருடங்களும் எதிர்பார்ப்புகளும்!

ஐபோன் 7 பற்றிய ஆருடங்களும் எதிர்பார்ப்புகளும்!

535
0
SHARE
Ad

iphone6,கோலாலம்பூர், டிசம்பர் 6 – ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஐபோன்களை வெளியிட்டு வருகின்றது. குறைந்த தொழில்நுட்ப வசதி கொண்ட செல்பேசிகளை, பல்வேறு சிறப்பு அம்சங்களையும், வசதிகளையும் உட்புகுத்தி அதனை திறன்பேசிகளாக மாற்றிய பெருமை, ஆப்பிள் நிறுவனத்திற்கு உண்டு.

மற்ற நிறுவனங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்த ஐபோன்களை தொடர்ந்து வெற்றிகரமாக கொடுத்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வருடத்திற்கான வெளியீடு ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகள்.

ஆப்பிள் வரலாற்றில் பயனர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 6, விற்பனையிலும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 2014-ம் ஆண்டு இறுதி கட்டத்தை நெருங்குவதால், பயனர்கள் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து அடுத்த என்ன மாதிரியான தயாரிப்பு வெளிவரப்போகிறது என எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

#TamilSchoolmychoice

தொழில்நுட்ப பத்திரிக்கைகளின் ஆருடங்கள்:

கடந்த 2013-ம் வருடம் ஆப்பிள், 5S மற்றும் 5C திறன்பேசிகளை வெளியிட்டது. அதேபோல், 2015-ம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில், ஐபோன் 6s மற்றும் அதற்கான திறன்கடிகாரங்களையும், மூன்றாவது காலாண்டில் ஐபோன் 7-ஐயும் ஆப்பிள் வெளியிட வாய்ப்புள்ளதாக ஒரு சில பத்திரிக்கைகள் ஆருடங்கள் கூறுகின்றன.

ஐபோன் 7 பற்றிய எதிர்பார்ப்புகள்:

தனது தயாரிப்பு பற்றிய எந்தவொரு தகவல்களையும் ஆப்பிள் மிக இரகசியமாகவே வைத்திருக்கும். எனினும், பல தொழில்நுட்ப பத்திரிக்கைகள், ஆப்பிள் வெளியிடும் சில அதிகாரப்பூர்வ தகவல்களைக் கொண்டே பல்வேறு ஆருடங்களைக் கூறி வருகின்றன.

அந்த வகையில் ஆப்பிள் தனது அடுத்த ஐபோன் தயாரிப்பிற்காக சோனி நிறுவனத்துடன் இணைய இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கு முக்கியக் காரணம், அடுத்த ஐபோன்கள் தொழில்நுட்ப கேமராக்களுக்கு சவால் விடும் வகையில் டிஎஸ்எல்ஆர் தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக. சோனி நிறுவனமும் தனது திறன்பேசிகள் தயாரிப்பினை குறைத்துக் கொள்ள இருப்பதால் ஆப்பிளுடன் இணைய வாய்ப்புள்ளது.

மேலும் ஐபோன் 7-ல், ‘சேப்பையர்’ (sapphire) கண்ணாடி உறைகள், 21 எம்பி கேமரா, 256ஜிபி உள்ளார்ந்த நினைவகம், A9 உணர்த்திகள் இப்படி பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.