Home வாழ் நலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நரம்புத் தளர்ச்சி குணமாகும் சீரகம்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நரம்புத் தளர்ச்சி குணமாகும் சீரகம்!

876
0
SHARE
Ad

cumin-seedsடிசம்பர் 12 – உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் மிக முக்கியமானது. பார்க்கும் போது அவ்வளவு வசீகரம்  இல்லாமல், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம்.

அடிக்கடி வயிற்று கோளாறு இருந்தால் வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் பாதி சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள்  வயிற்று கோளாறு குணமாகும்.

“எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு வீங்கிக் கொள்கிறது. அப்படி ஒன்றும்  அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது,” என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான  மருந்து.

#TamilSchoolmychoice

சீரகம், ஏலக்காய் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

Dill_seedசீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட நெஞ்சுவலி தீரும். சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும், இஞ்சிசாரிலும் கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்து வருவது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.