Home இந்தியா திமுக, அதிமுகவுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது – வைகோ!

திமுக, அதிமுகவுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது – வைகோ!

527
0
SHARE
Ad

vaikoதூத்துக்குடி, பிப்ரவரி 2 – வரும் 2016-ஆம் ஆண்டு தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் இதுவரை சிந்திக்கவே இல்லை. திமுக, அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி கூடாது என்ற கடந்தகால தேர்தலின்போது எடுக்கப்பட்ட எங்கள் பொதுக்குழுவின் முடிவினை நாங்கள் இதுவரை மறுபரிசீலனை செய்யவே இல்லை என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 23-வது மாநில பொதுக்குழுக்கூட்டம் நேற்று தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் திருமண மண்டபத்தில் நடந்தது. பொதுக்குழு கூட்டத்தினைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “தூத்துக்குடியில் இன்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 1511 உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். இக்கூட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன”.

#TamilSchoolmychoice

“தமிழகத்தின் வாழ்வாதாரங்களை சூழ்ந்துள்ள அழிவில் இருந்து காப்பாற்றும் கடமை தமிழக மக்களுக்கு இருக்கிறது. இந்த பிரச்சனையில் மக்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்றிடும் நோக்கில் இதனை மதிமுக தோள்மேல் சுமந்து நின்று போராடி வருகிறது.”

“தமிழகத்திற்கு எந்த காலமும் இதுமாதிரியான ஆபத்து வந்தது இல்லை. தமிழகத்தில் மதுவை ஒழிப்பதற்கான மக்கள் சக்தியை திரட்டுவது எங்கள் முக்கிய நோக்கமாகும். எங்களின் மது ஒழிப்பு நடைபயணம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது”.

“தாய்மார்கள், மாணவர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு எழுந்துள்ளது. மதுவின் தீமைகளை மாணவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாராத்தான் ஓட்டத்தை துவங்கி நடத்தி வருகிறோம்”.

vaiko1“பள்ளி தேர்வுகளுக்கு பின்னர் இது தொடர்ந்து நடைபெறும். மதுவிற்கு எதிரான விழிப்புணர்வை வேகப்படுத்திடும் பொருட்டு, வரும் நாட்களில் விழுப்புரம், திருவள்ளுவர், வேலூர் மாவட்டங்களில் வாகன பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம்”.

“தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும்வரை மதுவிற்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும். இலங்கையில் சிறீபாலசேனா பதவிக்கு வந்தபோதும் அங்கு தமிழர்களுக்கு ஒரு நன்மையும் நடக்கப்போவது இல்லை”.

“ராஜபக்சேவின் மறுஉருவம் தான் இவர். வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தில் இலங்கையில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்பதை காட்டுவதற்கான இலங்கையின் கூட்டு சதியுடன் மத்திய அரசு இங்குள்ள அகதிகளை அங்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது”.

“இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன். வரும் 2016-ஆம் ஆண்டு தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் இதுவரை சிந்திக்கவே இல்லை”.

“திமுக, அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி கூடாது என்ற கடந்தகால தேர்தலின்போது எடுக்கப்பட்ட எங்கள் பொதுக்குழுவின் முடிவினை நாங்கள் இதுவரை மறுபரிசீலனை செய்யவே இல்லை என்றார்” வைகோ.