Home நாடு நாடாளுமன்றத்தில் பிகேஆர் சிறப்பு தீர்மானம்: அன்வாருக்கு அரச மன்னிப்பு வேண்டும்!

நாடாளுமன்றத்தில் பிகேஆர் சிறப்பு தீர்மானம்: அன்வாருக்கு அரச மன்னிப்பு வேண்டும்!

455
0
SHARE
Ad

wan-azizahகோலாலம்பூர், பிப்ரவரி 11 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு தண்டனை வழங்கிய கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு தீர்மானம் (motion) ஒன்றை பதிவு செய்யப்போவதாகவும், அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்குவதையும் கருத்தி கொள்ள வேண்டும் என்றும் பிகேஆர் கட்சி அறிவித்துள்ளது.

அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு எப்படி கையாளப்பட்டது என்பதை விமர்சிக்கும் வகையில் இந்த செயல்பாடுகள் இருக்கும் என்றும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் கூறியுள்ளார்.

தங்கள் தரப்பு, வலுவான ஆதாரங்கள் அனைத்தையும் முன்வத்த போதிலும், முகமட் சைபுல் புகாரி அஸ்லான் தான் இந்த வழக்கில் முக்கிய சாட்சி என நீதிமன்றம் அறிவித்ததற்கு பிகேஆர் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் காஜாங் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அசிசா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்த நாட்டின் சுதந்திரமான நீதித்துறை மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இன்றைய முடிவு அழித்தது” என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வான் அசிசா கூறியுள்ளார்.

மேலும், அன்வார் சிறைக்குச் சென்றதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் பிகேஆர் சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அசிசா, பக்காத்தான் அளவில் கலந்து பேசி அதை முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

“அன்வாருக்கு வழங்கப்பட்டிருக்கும் நீதி அரசியல் சூழ்ச்சி நிறைந்தது. எனவே அவருக்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கான கோரிக்கை வைக்க அன்வாரிடமும், வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்” என்றும் வான் அசிசா தெரிவித்துள்ளார்.

“பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் இன்னும் வலுவான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும். காரணம் மக்களை சிறந்த முறையில் வழிநடத்தும் மிகப் பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது” என்றும் வான் அசிசா தெரிவித்துள்ளார்.

அன்வார் சிறையில் அடைக்கப்பட்ட சில மணி நேரங்களில் வான் அசிசா துணிச்சலான அறிவிப்பு ஒன்றை செய்துள்ளார். சுங்கை பூலோ சிறைக்கு வெளியே ஒவ்வொரு இரவும், விடியும் வரையில் கண்விழித்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வாருங்கள் என பிகேஆர் உறுப்பினர்களையும், பொதுமக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் மூலமாக அன்வாருக்கு வழங்கப்பட்டிருக்கும் நீதி சரியில்லை என்பதை உலகத்திற்கு உணர்த்தலாம் என்றும் வான் அசிசா கூறியுள்ளார்.