ஏப்ரல் 18 – ஆஸ்துமா எனப்படும் நீண்ட கால நுரையீரல் பாதிப்பு நுரையீரலில் உள்ள காற்றுக் குழாய்களை குறுக்கி விடுகின்றது. இது அடிக்கடி ‘வீஸிங்’ எனப்படும் சத்தமான மூச்சு (விசில் சத்தம் போல), மூச்சுத் தவிப்பு, நெஞ்சிருக்கம், இருமல் போன்ற வெளிப்பாடுகளை ஏற்படுத்துகின்றது.
இருமல், இரவிலும், விடியற்காலையிலும் ஏற்படும். ஆஸ்துமா எந்த வயதினரையும் பாதிக்கும் என்றாலும், குழந்தை பருவத்திலேயே அநேகமாக ஆரம்பித்து விடுகின்றது. ஆஸ்துமாவை அறிந்துக்கொள்ள முதலில் நாம் மூச்சுக் குழாய்களைப் பற்றியும், நுரையீரலைப் பற்றியும் ஓரிரு செய்திகளை அறிய வேண்டும்.
மார்பகக் கூட்டில் அடைந்துள்ள நுரையீரல் காற்றிலிருந்து ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயுவினை எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடு எனப்படும் கரியமில வாயுவினை வெளியேற்றுகின்றது. இதுவே மூச்சு விடுவதாகும். இந்த மூச்சு உயிர் வாழ்விற்கு முதல் அவசியமான ஒன்று.
சில நேரங்களில் ஆஸ்துமா பாதிப்பு சிறிய அளவில் ஏற்பட்டு சிறிய அளவிலான சிகிச்சையிலேயே மறையும். சிலசமயம் அதிகமான தொந்தரவினை ஏற்படுத்தும். ஆஸ்மாவிற்கு தீர்வு என்பது கிடையாது. இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் நன்றாகவே இருந்தாலும், எந்த நிமிடத்திலும் பாதிப்பு ஏற்படலாம்.
இன்றைய மருத்துவத்தில் ஆஸ்துமா பாதிப்பிற்கு முன்னேற்றமிக்க சிகிச்சைகள் உள்ளன. ஆஸ்துமா ஏன் ஏற்படுகின்றது? இதுதான் குறிப்பிட்ட காரணம் என்று இல்லை. ஆய்வில் சில காரணங்களை பாதிப்பின் அடிப்படையாக கூறியுள்ளனர்.
ஆஸ்துமாவை கட்டுப்படுத்த சில உணவு வகைகள்:
* வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்த பழங்கள், தக்காளியும் நுரையீரலுக்கு நல்லது.
* கேரட் சாறு, கேரட் உணவு மிகவும் சிறந்தது.
* காபி, கருப்பு டீ இவை இரண்டும் காற்று குழாய்களை சீராய் வைப்பதில் உதவுகின்றது.
* பூண்டு மிக சிறந்த உணவு.
* இன்றைய ஆய்வுகள் பாலில் உள்ள வைட்டமின் ‘டி’ ஆஸ்மாவிற்கு நல்ல நிவாரணம் என்றே நிரூபித்துள்ளது.
* உப்பு குறைவாக பயன்படுத்துவது ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
* சிகரெட் இவற்றினை விட்டு விடுங்கள்.
* இஞ்சியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* கடுகு எண்ணெய் சிறிது சூடு செய்து அதில் கற்பூரம் கலந்து நெஞ்சு, முதுகில் நன்கு தேய்துவர ஆஸ்துமா குணமாகும்.
* உலர்ந்த அத்திப்பழம் 3-4 எடுத்து நன்கு நீரில் சுத்தம் செய்து பின் சிறிதளவு நீரில் நன்கு ஊற வைத்து, மறுநாள் காலை ஊறிய பழத்தினை சாப்பிட்டால் ஆஸ்துமா குறையும்.
* ஒரு பூண்டை அரை கப் பாலில் கொதிக்க வைத்து அப்படியே குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.
* பச்சை வெங்காயம் (அ) சமைத்த வெங்காயம் உண்ணுங்கள்.
* பப்பாளி காய், பழம் இரண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
* மஞ்சளை உணவில் பயன்படுத்துங்கள்.
* கீரை, கேரட் போன்றவை நுரையீரலுக்கு ஏற்ற உணவு.