Home இந்தியா விவசாயியை தற்கொலைக்குத் தூண்டிய ஆம் ஆத்மி கட்சியினர்!

விவசாயியை தற்கொலைக்குத் தூண்டிய ஆம் ஆத்மி கட்சியினர்!

607
0
SHARE
Ad

farmerபுது டெல்லி, ஏப்ரல் 24 – நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது  ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில், கஜேந்திர சிங் தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்றும், அவர் தற்கொலைக்கு முயன்ற பொழுது அவர் காப்பாற்றப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஆம் ஆத்மி கட்சியினர் தடுத்தனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

“41 வயதான கஜேந்திர சிங், ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பொழுது அவரைக் காப்பாற்ற ஆம் ஆத்மி கட்சியினர் முயற்சிக்கவில்லை. மேலும், விவசாயியின் தற்கொலையை தடுப்பதற்காக காவல் துறையினர் மேற்கொண்ட முயற்சிகளையும் தடுத்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்து யாதவ் என்பவர் காவல் துறையினரிடம் அளித்துள்ள சாட்சியத்தின் படி, விவசாயி தற்கொலைக்கு முயன்ற பொழுது சில தொண்டர்கள் அவரை தூண்டும் விதமாக கைதட்டி உள்ளது தெரிய வந்துள்ளது.

எனினும், ஆம் ஆத்மி கட்சி, காவல் துறையின் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளது.