Home நாடு நூர் பிட்ரிக்கு இரண்டாம் வாய்ப்பு தரக்கூடாது – மாரா முடிவுக்கு தலைவர்கள் எதிர்ப்பு!

நூர் பிட்ரிக்கு இரண்டாம் வாய்ப்பு தரக்கூடாது – மாரா முடிவுக்கு தலைவர்கள் எதிர்ப்பு!

833
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 6 – லண்டனில் ஆபாச படங்கள் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள மலேசிய மாணவர் நூர் பிட்ரிக்கு, மாரா கல்வி நிறுவனம் இரண்டாவது வாய்ப்பு வழங்க முடிவெடுத்திருப்பதும், கணிதத்தில் சிறந்த மாணவரான அவர் தேசத்தின் சொத்து என்று மாரா கூறிக்கொள்வதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதேவேளையில், அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் அம்மாணவருக்கு இரண்டாம் வாய்ப்பு வழங்கக் கூடாது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Marina_Mahathir_1010

#TamilSchoolmychoice

மாராவின் இந்த முடிவு குறித்து தனது டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள டத்தின் படுக்கா மரினா மகாதீர், அந்த மாணவருக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுப்பதையும், கல்வி நிதி வழங்குவதையும் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

23 வதான அந்த மாணவர் இதே தவரை மலேசியாவில் செய்திருந்தால், இங்குள்ள குற்றவியல் சட்டப்படி இன்னும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 30,000 சிறுவர்களின் ஆபாச காணொளிகள் மற்றும் படங்களை வைத்திருந்தவருக்கு என்ன மாதிரியான நிதியை மாரா வழங்கப்போகிறது என்றும் மரினா கேள்வி எழுப்பியுள்ளார்.

இரண்டாம் வாய்ப்பு தேவையில்லை – கைரி

Khairy-Slams-Sarawak-DAP-Leader

 

இதனிடையே, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதின் இன்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், “அவர் சிறை தண்டனை அனுபவித்து தனது தவறை உணர்ந்த பின்னர், தானாகவே இரண்டாம் வாய்ப்பை தேடிக் கொள்ளட்டும். மாரா அதை வழங்கத் தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் கோரிக்கை மனு

நூர் பிட்ரிக்கு இரண்டாம் வாய்ப்பு வழங்குவதை மாரா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி ‘Care2 Petitions’ என்ற அகப்பக்கத்தில் கோரிக்கை மனு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

“Demand Majlis Amanah Rakyat (MARA) to stop giving a paedophile a second chance” என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த கோரிக்கை மனுவில் இதுவரை 1,724 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

மாரா (Majlis Amanah Rakyat -Mara) கல்வி நிறுவனத்தின் நிதி உதவியோடு லண்டனில் இம்பீரியல் கல்லூரியில் (Imperial College) நூர் பிட்ரி அஜ்மீர் நோர்டின் (வயது 23) என்ற மலேசிய மாணவர் படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 21ஆம் தேதி லண்டனில் அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனையிட்ட போலீசார், அவரது கணினியில் சிறுவர், சிறுமிகளின் 30 ஆயிரம் ஆபாச காணொளிகளும், படங்களையும் வைத்திருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.