லண்டன், மே 6 – மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. 56-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தேடுபதர்கான போது தேர்தல் பிரிட்டனில் நாளை நடைபெறுகிறது.
மொத்தம் உள்ள 650 இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் முதல் முறையாக தொழிலாளர் கட்சியும் கன்சர்வேடிவ் கட்சியும் அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.
கடும் போட்டி காரணமாக ஆட்சி அமைப்பது சிரிய கட்சிகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் 533 இடங்களுக்கும், ஸ்காட்லாந்தில் 509 இடங்களுக்கும் வேல்ஸில் 40 இடங்களுக்கும், வடக்கு அயர்லாந்தில் 18 இடங்களுக்கும் வாக்கு பதிவு நடைபெறுகிறது.
தொழிலாளர் கட்சி அல்லது கன்சர்வேடிவ் கட்சி பெருன்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்காவிட்டால் கிறிஸ்மஸ் பண்டிக்கைக்கு முன்னதாக அங்கு மீண்டும் தேர்தல் வரக்கூடும் என துணை பிரதமர் நிக் கிலேக் கூறியுள்ளார். பி
ரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி கடந்த 2010-ஆம் ஆண்டு தேர்தலில் 306 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 258 இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.