Home நாடு “நான் பதவி விலக மாட்டேன்” – நஜிப் திட்டவட்டம்

“நான் பதவி விலக மாட்டேன்” – நஜிப் திட்டவட்டம்

488
0
SHARE
Ad

najib-tun-razakதவாவ், மே 11 – பிரதமர் பதவியிலிருந்தோ அம்னோ தலைவர் பதவியிலிருந்தோ தாம் விலகப் போவதில்லை என டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மக்களும் அம்னோ உறுப்பினர்களும் தமது தலைமைத்துவத்தை ஆதரிப்பதால், பதவி
விலகுமாறு எழுந்திருக்கும் அழுத்தங்களுக்குத் தலைவணங்கப் போவதில்லை என்றும்
அவர் கூறியுள்ளார்.

தம் மீதான அண்மைய விமர்சனத் தாக்குதல்கள் குறித்து கவலைப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் ஆதரவுள்ள வரை அவர்களுக்கு சேவை செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஜனநாயக முறைப்படி நான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எனவே எந்தவொரு தனி மனிதருக்கும் என்னை பதவி விலகுமாறு கோரும் உரிமையில்லை,” என முன்னாள் பிரதமர் துன் மகாதீரை மறைமுகமாகக் குறிப்பிட்டு நஜிப் கூறினார்.

“எனக்கென அதிகாரம் உள்ளது. எனவே மக்களுக்கான எனது போராட்டங்கள் தொடரும். இன்று 40 ஆயிரம் பேர் இங்கு ஒன்று கூடி தங்களது பிளவுபடாத ஆதரவை எனக்குப்
புலப்படுத்தி உள்ளனர். தனிப்பட்ட ஒன்றிரண்டு நபர்களின் குரல்களைவிட இந்த
மக்கள் எழுப்பும் குரலே பெரிது. என்னை பதவியை விட்டுப் போகச் சொல்ல அவர்கள்
யார்?”

“ஜனநாயக முறைப்படி தேர்வான ஒரு தலைவரை விலகுமாறு கோர எந்தவொரு தனி நபருக்கும் உரிமையில்லை” என்று சபாவில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நஜிப் ஆவேசத்துடன் கூறினார்.

1எம்டிபி நிறுவனம் நிதி இழப்புகளைச் சந்தித்து வருவதாக துன் மகாதீர்
குற்றம்சாட்டியுள்ளது பற்றி குறிப்பிட்ட அவர், அத்தகைய சிக்கல்கள் விரைவில்
சரிசெய்யப்படும் என்றார்.

“சர்ச்சைகள் காரணமாகவே 1எம்டிபி நிலத்தை விற்று விடுமாறு தபோங் ஹாஜியிடம்
தெரிவித்தேன். 1எம்டிபியிடம் இருந்து அந்த நிதி வாரியம் நிலம் பெற்றது ஒரு
முதலீட்டு நடவடிக்கையே தவிர, 1எம்டிபியை காப்பாற்றுவதற்காக அந்த நிலத்தை தபோங் ஹாஜி வாங்கவில்லை,” என நஜிப் மேலும் தெரிவித்தார்.