Home நாடு நஜிப்பிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தது உண்மை – பண்டிகார் ஒப்புதல்

நஜிப்பிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தது உண்மை – பண்டிகார் ஒப்புதல்

702
0
SHARE
Ad

Pandikar-Amin Speakerகோலாலம்பூர், மே 19 – சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதிக் கொடுத்தது உண்மை தான் என டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா இன்று தனது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால், அக்கடிதத்தை கடந்த மார்ச் 19-ம் தேதி சந்திப்பின் போது, பிரதமர் நஜிப் துன் ரசாக் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமருடனான எனது சந்திப்பின் போது நான் கொடுத்த ராஜினாமா கடிதத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜினாமா செய்வதற்கான காரணத்தைக் கேட்டார். நான் அவரிடம் கூறினேன்” என்று பண்டிகார் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், தன்னை சந்தித்ததாக மகாதீர் கூறுவதில் பொய் இல்லை என்று கூறியுள்ள பண்டிகார், மகாதீருடனான அந்த சந்திப்பு கடந்த மார்ச் 13-ம் தேதி நடைபெற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

“நான் ராஜினாமா செய்யத் திட்டமிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியது குறித்து பொய் பேசவில்லை. ஆனால் பிரதமருடன் நான் பேசியது இந்த நாட்டிற்கும் மிகவும் தேவையான ஒன்று” என்று பண்டிகார் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கை ரீதியிலான சில விவகாரங்களால் தான் பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டதாகவும், தனது அறையில் போதுமான வசதிகள் இல்லை என்பதால் அல்ல என்றும் பண்டிகார் தெரிவித்துள்ளார்.