Home உலகம் ஜப்பான் ரகசிய ஆவணங்கள் எரிப்பு

ஜப்பான் ரகசிய ஆவணங்கள் எரிப்பு

612
0
SHARE
Ad

japanடோக்கியோ, மார்ச்.8-  இரண்டாம் உலகப் போரில் நேசப் படைகளிடம் சரணடைவதற்கு முன்பு அரசு தொடர்பான 8,000 ரகசிய ஆவணங்களை ஜப்பான் அரசு தீயில் எரித்துள்ளது.

இரண்டாம் உலகப் போர் நிறைவடையும் சமயத்தில் ஜப்பான் மேற்கொண்ட சில ரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நேசப்படைகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ஜப்பான் சரணடைய முடிவெடுத்தது. ஆனால் நேசப்படைகளிடம் தங்களது நாட்டைப் பற்றிய முக்கியக் குறிப்புகள் ராணுவ ரகசியங்கள் போன்றவை சிக்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது ஜப்பான்.

#TamilSchoolmychoice

அதற்காக 1945-ஆம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் மிக முக்கியமான 8000 ஆவணங்கள் அவை ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட களஞ்சியத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.