Home நாடு சரவாக் ரிப்போர்ட் முடக்கம்: அரசு பொய்களைப் பொறுத்துக் கொள்ளாது – அப்துல் ரஹ்மான்

சரவாக் ரிப்போர்ட் முடக்கம்: அரசு பொய்களைப் பொறுத்துக் கொள்ளாது – அப்துல் ரஹ்மான்

732
0
SHARE
Ad

Datuk-Abdul-Rahman-Dahlan-565x376கோத்தா கினபாலு, ஜூலை 21 – ‘சரவாக் ரிப்போர்ட்’ இணையதளம் முடக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் கூறும் பொய்களையும், குற்றச்சாட்டுகளையும் அரசாங்கம் இனியும் பொறுத்துக் கொள்ளாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் என வீடமைப்பு, உள்நாட்டு அரசாங்கம் மற்றும் நகர்புற நல்வாழ்வு அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அந்தளவிற்குப் பயனளிக்காது என்றும் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையைச் சொன்னால், இந்த நடவடிக்கை அவ்வளவு பயனளிக்கும் என எனக்கு நம்பிக்கையில்லை. மக்கள் மீண்டும் அதை அடைந்துவிடுவார்கள். அதனால் அரசாங்கம் சட்டப்பூர்வ நடவடிக்கையில் இறங்க வேண்டும்” என நேற்று துவாரானில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

1எம்டிபி விவகாரத்தில், பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுதாக ‘சரவாக் ரிப்போர்ட்’ இணையதளத்தில், அண்மையில் பல குற்றச்சாட்டுகள் அடங்கிய கட்டுரைகள் வெளியானது.

அதனைத் தொடர்ந்து, தகவல்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 211 மற்றும் 233-ன் கீழ், சரவாக் ரிப்போர்ட் இணையதளம் அரசாங்கத்தால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.