Home நாடு சரவாக் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி!

சரவாக் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி!

548
0
SHARE
Ad

Sarawakகோலாலம்பூர், ஜூலை 22 – தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், இன்று சரவாக் மாநிலத்தின் 52-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கூச்சிங்கில் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர்.

கடந்த 2013-ம் ஆண்டில் சரவாக் சுதந்திர தினத்தை முன்னிட்டு பேரணி செல்லும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த பேரணிகளை விட இந்த ஆண்டு தான் அதிகமான மக்கள் கூடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜூப்லி பொழுதுபோக்கு மைதானத்தில் கூடிய ஆயிரக்கணக்கானோர், அங்கிருந்து சோங் கெங் ஹாய் ரக்பி மைதானத்தை நோக்கி பேரணி சென்றனர். பின்னர் காலை 11 மணியளவில் கலைந்து சென்றனர்.

#TamilSchoolmychoice

படம்: பேஸ்புக்